Yogi Shiva Nesananda (Quotes 1) |
||
நாம் மனிதர்கள் இறந்து தான் ஆகவேண்டும் என்ற சிந்தனையுடன் வாழாமல், நம்மில் இருக்கும் அமரத்துவத்தை புரிந்து கொண்டால் மகிழ்ச்சியாய் வாழலாம். |
அமரத்துவத்தை புரிந்து கொண்டு உங்கள் விழிப்புணர்வு அனைத்தையும் உள் நோக்கிச் செலுத்துங்கள்.அதன் பிறகு நீங்கள் வெறும் கூட்டை மட்டுமே விட்டுச் செல்வீர்கள். |
இந்த வாழ்க்கை நோய் பிடித்த வாழ்க்கை. நீங்கள் எவ்வளவு தூரம் விலகி விடுகிறார்களோ, அது அவ்வளவு தூரம் உங்களை துரத்திக் கொண்டே இருக்கும். |
நோய் வந்தால் இறந்து விடலாம் என்று நினைத்து விடாதீர்கள். உங்களுக்கான பிராணனின் அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ள வரை நீங்கள் வாழ்ந்து தான் ஆக வேண்டும். |
தன்னுள் உள் சார்ந்து சென்று தியானிக்கும் ஒருவனுக்கு இறைவன் தீப ஒளியாக தோன்றுகின்றார். அவனுக்கு தினமும் தீபாவளிதான்.
|
ஆன்மா தன்னைத்தானே உணர்ந்தபின் பேச்சு என்பது பொருளற்றுப் போய்விட்ட அமைதி நிலை. மனம் எண்ணங்களற்றுப் போய்விட்ட மௌன நிலை. |
இறப்பு உங்களை நெருங்கும் போது அதை ஆனந்தமாக வரவேற்பு செய்யுங்கள். |
வாழ்க்கைத் தத்துவத்தை உணர்ந்து ஆனந்தமாக வாழாதவர்கள் தான் உயிரை நீட்டிப்பு செய்ய இறைவனிடம் யாசிப்பார்கள். |
என்னை அவமானப்படுத்துவதற்கான அங்கீகாரத்தை உனக்கு தரப்படவில்லை. அதனால் என்னை அவமானப்படுத்தினாலும் என்னுள் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. |
சில அறிவு படைத்தோரும் ஆணவத்தால், மதி மயங்கி அறிவற்றோராக புலன்களைத் திருப்திப்படுத்தவே செயல்படுவர். இவர்கள் அறிவிலியை விட தாழ்ந்தவராகவே கருதப்படுவர்.
|
வேதனைகளை புலன் இன்பமாக மாற்றாமல், உள் தியானம் பெற்ற அமைதியாக மாற்றவும். இது உங்கள் வலிக்கு ஒரு மருந்து. |
உள் சார்ந்து வாழ பழகும் போது வெளி சார்ந்த தேவைகள் குறைகிறது. |
இந்த நரகத்தில் உள்ள இதயத்தில் அன்பு என்னும் ஒளிமயமான சுவர்க்கம் இருக்கிறது. |
கோபத்தை வெளிப்படுத்தும் போதும் ஆனந்தமாக இல்லை. கோபத்தின் விளைவுகளை அனுபவிக்கும் போதும் ஆனந்தமாக இல்லை. அப்பொழுது எதற்காக கோபப்பட வேண்டும்? |
உலக வாழ்வில் ஈடுபட்டு, மாயையில் மயங்கி திரிபவர்கள் ஒருபோதும் ஈசனை காணவே முடியாது. |
இப்பிறவியில் அனுபவத்திற்கான கர்மா ஏராளமாக உள்ள நிலையில், புதிதாக கர்மாவை சேர்ப்பதற்கு நேரம் எங்கே இருக்கிறது? |
தெய்வத்தினை நோக்கிப் பயணிக்கும் நமது வண்டியில் தியானம், ஞானம் என்ற சக்கரங்களைப் பொருத்தி, பக்தி என்ற அச்சாணியால் நிலைநிறுத்த வேண்டும். |
ஒரு மனிதனை துன்பத்திலிருந்து விடுவித்தால் அவன் மற்றொரு துன்பத்தை பிடித்துக்கொண்டு தொங்குகிறான். ஏனெனில் துன்பத்தைப் பற்றிக் கொண்டு வாழ்வது அவனுக்கு அனிச்சைச் செயலாக மாறிவிட்டது.
|
இயற்கையாக மனதில் அலை பாயும் என்ன சூழல்களால் ஏற்படும் இன்ப துன்பங்களிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் ஒரு முறைதான் யோகம். |
ஒரு விளையாட்டை முடிக்கும் பொழுது, ஒரு புது விளையாட்டு ஆரம்பம் ஆகிறது. எந்த விளையாட்டை தேர்ந்தெடுப்பது என்பது மட்டும்தான் உங்களது கையில் உள்ளது.
|
மக்கள் உடல் முடிவடையும்போது எல்லாம் முடிந்து விடுகிறது என்று எண்ணிக்கொண்டு அறியாமையில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். |
மனம் என்பது புரியாத புதிராக இருக்கிறது. மனதில் தோன்றும் எண்ணங்களை பின்தொடர்ந்து சொன்றால் மனம் என்பது அடங்கிவிடும். |
மனதில் ஏற்படும் எண்ணங்களை பூர்த்தி செய்யும்பொழுது மனம் நம்மை ஆட்கொள்கிறது. |
யோகம் மற்றும் தியானம் செய்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரிக்கிறது. ஆனால் அவர்கள் போலி குரு, மதவாதிகள் மற்றும் பணம் பறிக்கும் சாமியார்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள். ஏனெனில் எந்த முயற்சியும் இன்றி கடவுளை அடைய வேண்டும் என்று நினைப்பதால் இது நடக்கிறது. |
இறைவன் உங்களை மகிழ்ச்சியாக வைத்துள்ள தற்கான காரணத்தை தேடுங்கள், அதற்காக அவனுக்கு நன்றி செலுத்துங்கள். எப்பொழுதும் அவனுக்கு நன்றி உணர்வுடன் இருங்கள். |
உங்களுக்குப் பசிக்கும்போது உங்களை சுற்றி உள்ளவர்களுக்கும் பசிக்கிறதா என்று சிந்தியுங்கள். நீங்கள் உண்ணும் பொழுது உங்களை சுற்றி இருப்பவர்களும் உணவு அருந்தி விட்டார்களா என்று சிந்தியுங்கள். |
அக கண்களால் ஆன்மீக ஒளி காணப் பெறாத காரணத்தால், புற கண்களால் சமூக ஊடகம் என்னும் மாய ஒளியில் சிக்கித் தவிக்கும் மானுடம்.
|
புலன் இன்பத்தை திருப்திப்படுத்தும் வாழ்க்கை முறை தான் சுதந்திரம் மற்றும் நாகரிகம் என்ற மாற்றம் மனித குலத்தின் சீர்கேட்டிற்கு காரணமாகிறது. |
கூண்டில், வீட்டில் மற்றும் சங்கிலியில் அடைபட்டு செல்லப்பிராணிகளாக வாழும் உயிரினங்கள். இதற்காக உருவாக்கப்படும் ஒரு வியாபாரச் சந்தை. இந்தச் செல்லப்பிராணிகளை விளர்க்கும் மனித விலங்குகள். இதைவிட மிகப்பெரிய கர்மாவை உருவாக்கும் செயல்கள் இவ்வுலகில் இல்லை. |
ஆன்மீகத்தில் தன்னை உணர்வது இறையை உணர்வதற்கு சமம். தன்னை உணர்வது என்பது தன் ஆன்மாவை உணர்வது. ஆன்மாவை உணர்வது பரமாத்மாவை உணர்வதற்கு சமம். |
எங்கு சென்றாலும் என்னை எடுத்துச் செல்வதையும் ஆனால் மரணத்தின் வாசலுக்குள் நுழையும்போது என்னை எடுத்துச் செல்ல முடியாது என்பதை அறிவேன். மெய்ஞானத்தின் பாதையில் பயணிப்பதால் நான் எதையும் எடுத்துச் செல்வதில்லை.
|
"நான் யார்?" என்று எனக்குத் தெரியாது என்ற அறிதலோடு எனது ஆன்மீக பயணம் ஆரம்பித்தது. |
முற்பிறவி மற்றும் மறு பிறவியை அறிய இயலாது. நான் அழியாத ஆத்மா என்பதை உணர இந்த பிறப்பைப் பெற்றேன். இந்த மனிதப்பிறவியின் குறிக்கோள் இறைவனை அடைவதே.
|
நீங்கள் ஆசிர்வதிக்கப்பட்ட ஆத்மா, இறைவனின் பிரதிபலிப்பு என்பதை நினைவில் கொள்ள வேண்டிய நேரம் இது. |
எல்லா இதயங்களுக்கும் பின்னால் ஒலிக்கும் இதயத்துடிப்பு, இறைவனது அன்பின் வெளிப்பாடாகும். |
இறைவன் என்னிடம் கூறியது என்னவென்றால் நீ அறியாமை என்னும் இருளில் மூழ்கி இருந்ததால் என்னை உன்னால் உணர முடியவில்லை. இப்பொழுது நீ என்னை காண்பதெல்லாம் மழைத்துளியை போல. ஆனால் நான் கடலைப் போல பரந்து விரிந்து உள்ளேன். |
இறைவனே பிரதான பொருள். அவனை அடைவதே இலட்சியம். அதற்காகத்தான் இந்த மனிதப் பிறவி. நடுவில் நடப்பவை எல்லாம் நாடகம். |
ஆணின் தொடர்ச்சி பெண். பெண்ணின் தொடர்ச்சி ஆண். இன்பத்தின் தொடர்ச்சி துன்பம். துன்பத்தின் தொடர்ச்சி இன்பம். |
ஆண்டவனின் பாதையில் செல்லும்போது இன்பமும் கிடையாது துன்பமும் கிடையாது. இது அமைதி மற்றும் ஆனந்திற்கான வழி.
|
எப்பொழுதெல்லாம் உங்களுக்குள் அசுர குணம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் உங்களது பரிணாம வளர்ச்சி பின்னோக்கி தள்ளப்படுகிறது. |
அமாவாசை இருட்டாக இருக்கும் என்ற சோகத்தில் முழு நிலவின் ஒளியை இழக்காதீர்கள். |
ஆன்மீகப் பயணம் என்பது முடிவற்ற உண்மையை தெரிந்து கொள்வதற்கான முயற்சி. உங்கள் ஆன்ம சொரூபம் வெளிப்படும் போது பயணம் முற்றுப்பெறும்.
|
கனவு என்பது உங்களது எண்ணக் குவியல்களை படம்பிடித்துக் காட்டும் மாயக்கண்ணாடி. கனவில் தேவதை வந்தாலும் கடவுள் வந்தாலும் மாயை தான். |
உலக வாழ்வில் எதை இழந்தாலும் ஆன்மாவிற்கு நஷ்டம் ஆகாது. இறை நம்பிக்கையை இழக்காத வரை.
|
காலையும் மாலையும் இறைவனை வணங்குவதால் மட்டும் எந்த மாற்றமும் நிகழ்ந்து விட போவதில்லை. வாகனத்தை இயக்குவதற்காக எரிபொருளை நிரப்புவதை போல, இயந்திரத்தனமாக நீங்கள் கடவுளை உபயோகப்படுத்துகிறீர்கள். |
நீ உன்னில் எந்த அளவிற்கு விரிவடைகிறது செல்கிறாயோ அந்த அளவிற்கு அமைதியும் சாந்தியும் பெறுவாய். |
மன கிளர்ச்சி , தேக கிளர்ச்சி, உற்சாகம் மற்றும் சுவாரஸ்ய இச்சை இவற்றிற்கு வாழ்க்கையில் இடம் கொடுக்காதீர்கள்.இவையெல்லாம் உங்களை மன அழுத்தம் மற்றும் மன நோய்க்கு இட்டுச் செல்லும். |
எங்கே தேவைகள் இருக்கிறதோ அங்கே கடவுள் இருப்பார். |
தரையில் ஒரு வீட்டைக் கட்டுவது மிகவும் எளிதானது. கடவுளின் இதயத்தில் இடம் பெற பல பிறவிகள் தேவை. |
ருத்ரனே பிராணன். பிராணனைக் குறிக்கும் எல்லாமே ருத்ரன் தான்.
|
ஆன்மீகத்தில் மேல்நோக்கி பயணிக்கும்போது மாயையின் தாக்குதல் அதிகரித்துக்கொண்டே இருக்கும். சில சமயங்களில் அதனுடைய தாக்குதல் சூறாவளியை ஒத்ததாக இருக்கும். |
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
No comments:
Post a Comment