ஓம் நமசிவாய!
ஓம் கிரியா பாபாஜி நம ஓம்!
1. சாத்விக குணம் அல்லது சத்வம்:
குணத்திலிருந்து தோன்றும் இயல்புகள்; நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், வைராக்கியம், தவம், வாய்மை, கருணை, அகிம்சை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை), மனத்திருப்தி, மனத்தூய்மை, தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), பணிவு மற்றும் எளிமைத் தன்மை ஆகும்.
தர்மச்செயல்கள்; தன் செயல்களை
பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது;
பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது சத்துவ குணத்தின் பலன்கள் ஆகும்.
சத்துவ குணமுடையோன் தெய்வத்தன்மையும், பற்றற்ற நிலையும்; விழிப்பு நிலையும் மற்றும் இறப்பிற்குப் பின் மேலுலகங்களையும் அடைகிறான்
2. தமோ குணம் அல்லது தமஸ்:
ஒரு மனிதனிடம் அமைந்துள்ள குணங்களான காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை செய்தல், இரத்தல், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை உணர்வு, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்தல், பகட்டுக்காகச் செய்யப்படும் செயல்களைக் குறிக்கும்.
தமோ குணத்திலிருந்து, சோம்பல் உண்டாகிறது.
தமோ குணப்பெருக்கினால் இராட்சசத் தன்மையும்,
மோகமும் அதிகரிக்கின்றது.
தமோ குணத்தினால் உறக்கநிலையும் உண்டாகிறது. தமோ குணத்தால் மறுபிறவியில் விலங்கு, மரம், செடி, கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது.
3 ரஜஸ் அல்லது ரஜோ குணம்:
இராட்சத குண இயல்புகளான ஊக்கம், வீரம், ஞானம் தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல், பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ஆகியவற்றைக் கொண்டிருப்பதைக் குறிக்கும்.
ராட்சத குணத்திலிருந்து இன்பப்பற்று; ரஜோ குணப் பெருக்கினால்
அசுரத்தன்மையும், செயல்புரிவதில் ஆர்வம்,
கனவு நிலையும், இறப்பிற்குப்பின் மனித உடலையும் அடைகிறான்.
- Yogi Shiva Nesananda
No comments:
Post a Comment