ஓம் நமசிவாய!
ஓம் கிரியா பாபாஜி நம ஓம்!
இந்த மனம் எண்ணங்களை தொழிற்சாலை போல உருவாக்கிக் கொண்டிருக்கிறது
அதற்கு உடலும் கட்டுபட்டு செயல்படுகிறது, அதனால் நம்முள் அமைதியின்மை ஏற்படுகிறது.
ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு உள்ளுணர்வு இருக்கிறது அந்த உணவின் மூலம் நாம் அமைதியை உருவாக்க வேண்டும்.
உள் உணர்வு என்பது நம்முள் உள்ள மனதை, எண்ணங்களை, சிந்தனைகளை, செயல்களை ஒருமுகப்படுத்துதல் ஆகும்.
மனதின் தூண்டுதலால் செய்யப்படும் செயல்கள் அனைத்தும் வெளிப்புறத்தில் நடைபெறுகிறது ஏனெனில் நமது பார்வை வெளிப்புறத்திலிருந்து உட்புறமாக எண்ணப் பதிவுகளை சேமித்து வைத்துள்ளது.
நாம் நம் உணர்வின் மூலம் உள் செல்லும் பொழுது இவை எல்லாவற்றையும் அழித்து நமது ஆன்மாவை உணர முடியும்.
ஆன்மாவை உணர்ந்தால் நம்மால் பரமாத்மாவை உணரமுடியும். அப்பொழுது நம்மில் நிரந்தரமான ஒரு பேரானந்தம் குடிகொள்ளும்.
இறைவனுக்கான கதவுகளை எவ்வாறு நாம் வெளிக்கொணர்வது.
இந்தக் கதவை பூட்டி அது நாம்தான் அதை நாம் தான் திறக்க வேண்டும் அதற்கான மிகச்சிறந்த உத்தி தான் தியானம்.
தியானம் என்பது அனாகதம் சக்கரம், ஆஞ்யா சக்கரம் மற்றும் சகஸ்ராரம் சக்ரா ஆகியவற்றில் செய்யப்படுகிறது.
இதெல்லாம் ஒரு குருவின் மூலமும் பயிற்சி பெற்று அல்லது தீட்சை பெற்று நாம் செய்வது வேண்டும்.
தியானம் என்றால் என்னவென்று தெரியாத ஒருவரும் செய்யக்கூடிய எளிமையான தியானம் இதய நிறைவு தியானம்.
இதை Heart rhythm meditation or Heartfull meditation என்று அழைப்பார்கள்.
இந்த இதய நிறைவு நிறைவு பயிற்சிக்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
1 அமைதியான ஒரு இடத்தைத் தேர்ந்தெடுங்கள்.
2 அங்கு இயற்கையான வெளிச்சம் அல்லது மிகக்குறைவான வெளிச்சமாக இருக்குமாறு சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
3 முதுகுத்தண்டை நேராக வைத்து எளிமையான தியான நிலையில் அமருங்கள்.
4 கண்களை மூடிக்கொண்டு ஐந்து முறை மூச்சை உள்ளிழுத்து வெளிவிடுங்கள் அப்பொழுது உங்கள் மூச்சின் மீது கவனம் இருக்கட்டும்.
5 எனது YouTube channel' Heart Beat Meditation லில் கொடுக்கப்பட்டுள்ள Heartbeat Meditation வீடியோவை ஆன் செய்து கொள்ளுங்கள். (குறிப்பு : தேவைப்பட்டால் மட்டும் இதை உபயோகியுங்கள). இல்லையேல் உங்களுக்குள் இருக்கும் இயற்கையான இதயத்தின் சத்தத்தை உணருங்கள்.
குறிப்பு : இதயம் என்பது தூல இதயம் அல்ல, மார்பின் நடுவில் உள்ள இதயச் சக்கரம் (அனாகதம் சக்கரம்).
அனாகதம் சக்கரம், இதற்கு இருதயச் சக்கரம் என்ற என்கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் இது இருக்கிறது. அன்பு, பாசம்,இரக்கம்,சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும். தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம், நுரையீரல்கள்,இரத்த ஓட்டம், கல்லீரல்,ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.6 கண்களை மூடிக்கொண்டு உட்புறமாக சென்று உங்கள் இதயத்தின் சப்தத்தை உணருங்கள் (லப்டப் லப்டப் … லப்டப் லப்டப் … லப்டப் லப்டப்).
உங்களது உன் மனதின் எண்ண குவியல்களை அனாகதம் சக்கரத்தின் மீது குவியுங்கள்.
7 மனதில் ஏதாவது எண்ணங்கள் உதித்தால் லப்டப் லப்டப் என்று உங்களுக்குள் சொல்லி எண்ண அலைகளை நிறுத்துங்கள்.
8 இந்தப் பயிற்சியை 5,10, படிப்படியாக அதிகரித்து 30 நிமிடங்கள் தினமும் செய்யுங்கள் (from Step 1 to 7).
9 குறிப்பாக இந்தப் பயிற்சியின் பொழுது இதயத்துடிப்பின் மீது அழுத்தத்தை ஏற்படுத்தாதீர்கள்.
10 இந்த தியானம் செய்வதற்கு மிக எளிமையானது எந்த ஒரு மந்திரங்களோ அல்லது இறைவனே கும்பிடுவது தேவையில்லை.
இதனால் வெளிப்புற செயல்களில் இருந்து நீங்கள் விடுபடுவீர்கள்.
உங்களது எண்ணங்களில் இருந்து விடுபடுவீர்கள்.
நாட்கள் செல்லச் செல்ல உங்களது ஆன்மாவை உணர்ந்து அந்த ஆன்மாவின் மூலம் இறைவனுக்கான கதவுகளை நீங்கள் திறப்பீர்கள்.
இந்த இதயத்தை சார்ந்த தியானத்தின் மூலம் உங்கள் உடலுக்கு ஆற்றல், சக்தி மனதிற்கு அமைதி, சாந்தம் ஆன்மாவிற்கு பேரானந்தம் கிடைப்பதை நீங்கள் உணர இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
உங்களுக்கு இந்த தியான முறைகளைப் பற்றி ஏதாவது கேள்விகள் இருந்தால் என்னை தொடர்பு கொள்ளலாம்.
- Yogi Shiva Nesananda
No comments:
Post a Comment