ஆழ்நிலை தியானம் எதற்காக செய்ய வேண்டும்?

ஓம் நமசிவாய!

ஓம் கிரியா பாபாஜி நம ஓம்!

முதலாவதாக ஆழ்நிலை தியானம் நமக்கு சந்தோஷத்தையும் மன அமைதியையும் தருகிறது.


ஆசைகளும் உணர்ச்சிகளும் நிறைவேறுவதால் கிடைக்கும் இன்பம் நிலைத்திருப்பதில்லை.


நீ இந்த இன்பங்கள் கடந்த பிறகு நமக்கு இன்னல்கள் ஏற்படலாம்.


இந்த வெளிப்புற தூண்டுதல் இல்லாமல் மனம் சந்தோசமாக இருக்க தியானம் செய்ய வேண்டும்.



நாம் ஆழ்நிலை தியானம் செய்ய ஆரம்பிக்கும் பொழுது மனம் முரண்டு பிடிக்கும், மனதை கட்டுக்குள் வைக்க பயிற்சி தேவை.


மனம் நல்ல எண்ணங்களால் கவரப்பட பயிற்சி அளிக்கப்பட வேண்டும்,

சிறிது காலம் சென்றபின் மனம் நம் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். கெட்ட வழிகளுக்கு திரும்பாது.
ஆழ்நிலை தியானம் செய்ய சில வழிமுறைகளை நாம் செய்ய வேண்டும்.

கண்களை மூடிக்கொண்டு ஏதாவது ஒன்றை பற்றிக்கொள்ள வேண்டும்



ஓம் நமசிவாய என்ற சொல் சொல்லலாம்.

நான் யார்? என்ற சுயவிசாரணை செய்யலாம்.

மனதின் எண்ணங்கள் எங்கிருந்து உருவாகிறது என்று சுய விசாரணை செய்யலாம்.

- Yogi Shiva Nesananda


No comments:

Post a Comment

Yogi Shiva Nesanananda

Love yourself