திருமணம் எதனால் நிச்சயிக்கப்படுகிறது?

  திருமணம் எதனால் நிச்சயிக்கப்படுகிறது?

 ஓம் நமசிவாய!

ஓம் கிரியா பாபாஜி நம ஓம்!


சிவபெருமான் காக்கும் தொழிலை விஷ்ணுவுக்கு அளித்துவிட்டார்.

அதைப்போல படைக்கும் தொழிலை பிரம்மாவிற்கு அளித்துவிட்டார்.


பிரம்மா தன்னுடைய தொடையிலிருந்து நாரத மகரிசியையும், தன்னுடைய நிழலிருந்து கர்த்தமரிசியையும், பெருவிரலிருந்து தட்சனையும் படைத்தார். இவ்வாறு பதிமூன்று மானசீக புத்தரர்களை பிரம்மா உருவாக்கினார்


திருப்பாற்கடலை கடையும் போது அதிலிருந்து வெளி வந்த சரசுவதி தேவியை மணந்து கொண்டார். முதலில் பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோரைத் தோற்றுவித்தார் எனவும், ஆனால், அவர்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்து மெய்ஞானத்தினை அடைய சென்றதால், நாரதர், தட்சகன், வசிஷ்டர், பிருகு, கிரது, புலஸ்தியர், ஆங்கிரசு, அத்திரி, மரீசி ஆகியோரை பிரம்மா தோற்றுவித்து தனக்கு உதவியாக இருக்கும்படி செய்தார்.


படைப்புத் தொழில் அதிபதியான பிரம்மா படைத்த மகன் மற்றும் மகள்கள் மற்றும் மனைவி அனைவரும் உலகத்தின் இனவிருத்திக்கு உதவியாக இல்லை.


அதனால் பிரம்மா தான் படைத்த உயிரினங்களிடம் இனவிருத்திக்கான கடமையை அளித்துவிட்டார்.


உலகத்தில் உள்ள அறிவு மற்றும் ஐந்தறிவு உள்ள உயிரினங்கள் அனைத்தும் இந்தக் கடமையை சரிவர செய்து வருகின்றனர்.


ஆனால் ஆறறிவு படைத்த மனிதன் மாயையில் நீ கொண்டுள்ளதால் அவனால் இனவிருத்தி செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.


மனிதனின் ஐம்புலன்கள் ஒவ்வொன்றும் ஒரு இன்பத்தில் சிக்கிக் கொண்டிருக்கிறது.

கண் - ஒளி

காது- ஒலி

மூக்கு- சுவாசம்

வாய் - சுவை, மொழிதல்

மெய் - உண்மை,உடல்


அதனால் ஆறறிவு படைத்த மனிதனுக்கு காமம் என்ற இச்சை, காதல், ஆசையும் சேர்ந்து அளிக்கப்பட்டது.


அதனால் மனித இன விருத்தியில் ஈடுபடுவதை விட காம இச்சையில் ஏற்படும் இன்பத்தால் ஆண், பெண்கள் உறவு ஏற்பட்டது. காமம் என்ற ஒன்று இல்லாவிட்டால் மனித இனவிருத்தி இருக்காது.


திருமணம் என்ற பந்தம் உருவாவதற்கு முன்பு பல தாரம் என்பது தவறாக கருதப் படுவதில்லை.


பகவான் கிருஷ்ணன் மொத்தம் 16,008 மனைவிகளை கொண்டிருந்தார்.


பஞ்ச பாண்டவர்கள் ஐந்து பேருக்கும் திரௌபதி ஒரு மனைவியாக இருந்தாள்.


காதல் மற்றும் எனக்கு மட்டுமே அவள் சொந்தமானவள் என்றதால் ஒரு தரம் மற்றும் திருமணம் என்ற பந்தம் உருவாக்கியது.

காலங்கள் உருண்டு சென்ற செல்ல பலதாரம் என்பது மறைந்து ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதை சட்டமாக்கப்பட்டுள்ளது.  திருமணம் சமூகத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கிறது. 



 திருமணம்(க்ரிஹஸ்தா) என்பது வாழ்க்கையில் இரண்டாவது படிநிலை.

பிரம்மச்சரியம், க்ரிஹஸ்தா,வானப்பிரஸ்தம்,  சன்னியாஸ் என்று வாழ்க்கையில் நான்கு படி நிலைகள் உள்ளன.


 க்ரிஹஸ்தா என்றபடி நிலையில் தனது இன விருத்தியை செய்து முடித்த பின்பு வானப்பிரஸ்தம் சந்நியாசம் என்ற அடுத்த படி நிலைக்குச் உயர்ந்து இறைவனை உணர்வதற்காக முக்கியமாக திருமணம் நிச்சயிக்கப்படுகிறது என்பது சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.

மணம் என்ற சொல்லுக்குக் 'கூடுதல்' என்பது பொருள்.  'திரு என்ற அடை கொடுத்து அழைப்பது தமிழர் மரபாகையால் இல்லற வாழ்வின் அடிப்படையாக அமையும் மணம் "திருமணம்" என்று அழைக்கப்படுகிறது.


திருமணம், குழந்தைகளைப் பெற்றெடுத்தல், ஒருவருடைய குடும்பத்தை நிலைநிறுத்துதல் மற்றும் இறைவனுக்கு சேவை புரியும் பிராமணர்களுக்கு உதவுதல் மற்றும் புனிதர்களுக்கு உதவுதல், மற்றும் கடவுள்கள் மற்றும் முன்னோர்களுக்கான கடமைகளை நிறைவேற்றுதல். இவையெல்லாம்  க்ரிஹஸ்தர் என்பவருடைய கடமைகளாகும்.

க்ரிஹஸ்தருடைய கடமைகளை திருவள்ளுவர் பின்வருமாறு விளக்கியுள்ளார்.


இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்

நல்லாற்றின் நின்ற துணை.

குறள் :41 

மனைவியோடு வாழ்பவன்தான் பிள்ளைகள், பெற்றோர், உறவினர் என்னும் மூவர்க்கும் நல்ல வழியில் உதவுபவன்.


துறந்தார்க்கும் துவ்வாதவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை.

குறள் :42

மனைவியோடு வாழ்பவன்தான் துறவியர், வறுமைப்பட்டவர், இறந்து போனவர் என்பவர்க்கும் உதவுபவன்.


ஒரு பிரம்மச்சாரி இறைவனை அடைவதற்கான வழிமுறைகளை விட ஒரு க்ரிஹஸ்தர் இறைவனை அடைவது மிகவும் எளிது.


 - Yogi Shiva Nesananda


No comments:

Post a Comment

Yogi Shiva Nesanananda

Love yourself