ஆறறிவு உடையவனா மனிதன்?

ஓம் நமசிவாய!

ஓம் கிரியா பாபாஜி நம ஓம்!

ஆறறிவுகளுக்கான குணங்களை கீழே பார்க்கலாம்.


முதல் அறிவு: உற்றறிதல் (உடலால் மட்டும் உணர்வது) - மரம்

ஈரறிவு: நாக்கு/சுவையுணர்தல் - மீன் 

மூன்றறிவு: மூக்கு/மோப்பம் - எறும்பு

நான்கறிவு: கண்/பார்த்தல் - பூச்சி

ஐந்தறிவு: காது/கேட்டல் - விலங்குகள், பறவைகள்

ஆறறிவு: மனம்/சிந்தித்தல், பகுத்தறிதல் - மனிதர்கள்


ஈரறிவு என்பது முதல் அறிவு மற்றும் ஈரறிவு ஆகியவற்றை கொண்டுள்ளதாகும். அதைப்போல ஆறறிவு என்பது முதல் அறிவிலிருந்து அனைத்து அறிவுகளையும் கொண்டுள்ளதாகும்.


கடவுள் முருகர் ஆறு தலைகளைக் கொண்டிருக்கிறார். அதை யாராவது பார்த்ததுண்டா? இங்கு ஆறு தலை என்பது கடவுள் முருகரின் ஆறு குணங்களை சொல்வதாகும்.

ஒவ்வொரு தலைகளும் மனிதனின் ஒவ்வொரு நல்ல குணங்களை சொல்வதற்காக முருகருக்கு ஆறு தலை இருக்கிறது.


மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இருக்கும் முக்கியமான ஒரு வித்தியாசம் என்னவென்றால் அந்த ஆறாவது அறிவு தான்.


அழைத்து உயிரினங்களுக்கும் வாழ்தல் என்பது தேவையான உணவு பெறுதலே ஆகும்.


ஆனால் மனிதனின் தேவைகள் என்பது அடிப்படைகளை தாண்டி ஆடம்பரத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அதில் பணம் மற்றும் ஆசை என்பது முக்கியமான இடத்தைப் பெறுகிறது.


மனிதன் முதலில் அவனுக்கு தேவையான உணவுகளை இயற்கையிடமிருந்து பெற்று கொண்டிருந்தான். பிறகு உயிரினங்களை வேட்டையாடி புசிக்கத் தொடங்கினான். அதன் பிறகு அவனது தேவைக்கான உணவுகளை உற்பத்தி செய்ய ஆரம்பித்தான். இவ்வாறு ஆறாவது அறிவின் மூலம் மனிதருக்கான தேவைகளை தானே பூர்த்தி  செய்து கொண்டான்.


பரிணாம வளர்ச்சி அடைந்த மனிதன் ஒரு கட்டத்தில் வாழ்க்கைக்கான அடிப்படை தத்துவங்களை மறந்துவிட்டான். 

ஒவ்வொரு மனிதனுக்கும் ஆறு குணங்கள் உள்ளன. இந்த ஆறு குணங்களையும் எப்பொழுதும் பேனுபவனே முழுமையான மனிதனாகிறான்.


1. உண்மை உரைத்தல்.

2. தர்மம் செய்தல்.

3. சோம்பல் தவிர்த்தல்.

4. பொறாமை விடுதல்.

5. பொறுமை கொளல்.

6. தைரியம் பேணல்.


மேற்கண்ட காரணங்களின் மூலம் உங்களுக்கு தெளிவாக தெரிகிறது மனிதன் எப்பொழுதும் தனது ஆறாவது அறிவில் இருப்பதில்லை என்று. சூழ்நிலைகளுக்கு தகுந்த மாதிரி அவன்  ஓரறிவு முதல் ஆறறிவு வரை கொண்ட மிருகமாக மாறி விட்டான்.


மனிதன் எப்பொழுது ஐம்புலன்களுக்கு முன்னுரிமை அப்பொழுது அவன் மிருக குணத்தை அடைகிறான்.


உதாரணமாக புராணத்தில் இந்திரன், கௌதம ரிஷியின் பத்தினியின் அழகில் மயங்கி அவளிடம் இன்பம் புரிந்தான்.


இந்திராணியிடம் இல்லாத அழகா அகலிடம் இருந்தது? ஆனால் இந்திரனின் மனம் அவனது மனைவியை விட அகழியின் அழகில் தான் இன்பம் உள்ளது என்று சொன்னது. மதிகெட்ட இந்திரன் மிருகமாக மாறினான்.


இதைப்போல ஒவ்வொரு மனிதனும் மனம்போன போக்கிலும் மற்றும் புலன் போன போக்கில் செல்லும்பொழுது தனது மனிதத்தன்மையை இழக்கிறான்.


இந்த தன்மை நொடிக்கு, நொடி அல்லது மணிக்கு, மணி மற்றும் மனிதனுக்கு, மனிதன் மாறுபடும். 

எந்த ஒரு மனிதனும் முழுமையான ஆறறிவு படைத்தவனாக அல்லது அதற்குரிய குணங்களை படைத்தவனாக இருப்பதில்லை.


எப்பொழுதும் ஆறறிவு உடைய மனிதனாக இருப்பதற்கான வழிமுறைகள் என்பது இறைவனிடம் சரணாகதி அடைவது, தியானம் மூலம் மனதைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சுய விழிப்புணர்வுடன் ஒவ்வொரு செயல்களையும் செய்வதேயாகும்.


நமக்குள்ளே இருக்கும் கோரமான மறுபக்கத்தை புரிந்து கொண்டால் தான் அதற்கு அடிமையாகாமல் தப்பிக்க முடியும். உதாரணமாக, அதிகாரம் என்பது மிகவும் ஆபத்தான மிருகம்.


மிருகத்திடம் அன்பாக பழகுங்கள்,

அதற்கும் மனித குணம் வந்து விடும்...!

மனிதனிடம் எச்சரிக்கையுடன் இருங்கள்,

அவன் எப்போது வேண்டுமானாலும் மிருகமாகலாம்...!


எந்த ஒரு நோய்க்கும் மருந்து உண்டு ஆனால் மனிதனின் மனதிற்கு எந்த ஒரு மருந்தும் கிடையாது அது தெய்வத்தின் கருணையால் மட்டுமே சாதிக்கக் கூடியது.


இதற்கு மேலும் நான் சொல்வதற்கு எதுவும் இல்லை. இதைப் பற்றிய புரிதல் உங்களுக்கு வேண்டுமெனில் இன்றைய செய்தித்தாள் அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் செய்திகளையோ பார்க்கலாம். ஒவ்வொரு மனிதனும் இவ்வாறு ஒவ்வொரு மன நிலையில் என்னென்ன தவறு புரிகிறான் என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும்.


மனிதனாய் பிறந்து

மிருகமாகிறான் பின்

மண் தின்னும் நொடியை

மறந்தே போகிறான்...!



- Yogi Shiva Nesananda

No comments:

Post a Comment

Yogi Shiva Nesanananda

love