உயிர் என்றால் என்ன அது எங்கு உள்ளது?

 ஓம் நமசிவாய!

ஓம் கிரியா பாபாஜி நம ஓம்!


உயிர் என்பது பிரம்ம சக்தி. அது இங்கு தான் உள்ளது என்று இறுதியிட்டுக் கூற இயலாது ஏனென்றால் அது உடல் முழுதும் பரவி இருக்கிறது.

ஆன்மா அல்லது ஆத்மா என்பது இரு வினைகளால், ஐந்து பூதங்களால், இறை சக்தியால் பூமியில் உடம்பிற்குள் ஜனனம் எடுக்கிறது.

உயிருக்கும் ஆன்மாவிற்கும் சம்பந்தம் இருக்கிறது. ஆன்மாவின் வாகனம் தான் உயிர்.

இப்பொழுது நீங்கள் ஆன்மாவை உணர்கிறீர்களோ அப்போது உங்களால் உயிரையும் உணர முடியும்.

ஒரு மனிதன் இறந்த பிறகு அவனது மனமும் எண்ணங்களும் உடலும் மற்றும் உயிரும் அழிந்துவிடுகிறது.

ஆனால் ஆன்மாவிற்கு அழிவு என்பது கிடையாது.
இந்தப் பிறவியுடன் உங்கள் ஆன்மாவிற்கும் உயிருக்கும் சம்பந்தம் விலகிவிடுகிறது.

நீங்கள் செய்த வினைக்கு ஏற்ப உங்கள் ஆன்மா ஓர் புதிய உயிருடன் புதிய உடம்புக்குள் புகுந்து விடுகிறது.

ரயில் போல் பிறவிகள். ரயில் பெட்டி என்பது உயிர் மற்றும் உடல். ஒவ்வொரு பிறவியிலும் ஆன்மா ஒவ்வொரு ரயில் பெட்டிகளில் பயணம் செய்கிறது.
ரயிலை ஓட்டுபவர் இறைவன் ஒருவரே அவரை சரண் அடைந்தால் உடல், உயிர், ஆன்மா எல்லாம் புனிதமடையும்.

ஆத்மா = உயிர் (பிரபஞ்சத்தில் இரண்டறக் கலந்த நிலை)+ மனம் ( எண்ணங்கள் மற்றும் நினைவுகள்) +வினைகள்.


உயிர் என்பது நம் உடம்பில் உள்ள ஒரு உறுப்பு அல்ல. உயிர் என்பது நமது உடம்பின் உள்ளும் வெளியிலும் ஒவ்வொரு மயிர்க்காலிலும் கூட இருந்து கொண்டே இருக்கிறது. அது இல்லை என்றால் ஒரு வினாடியில் சப்த நாடியும் அடங்கி விடும்.

உயிர்கள் அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக இருக்கின்றது. ஆனால் ஆன்மா என்பது மனிதனுக்கு மட்டுமே உரிய ஒன்றாக இருக்கின்றது. ஆன்மா இருக்கும் காரணத்தினால் தான் மனிதனால் மற்ற உயிரினங்களை ஆட்சிப் புரிய முடிகின்றது. ஆன்மா இருப்பதினால் தான் அவனால் மாற்றங்களைப் புரிய முடிகின்றது. ஆன்மா அவனுக்கு சுயமாக முடிவு செய்யும் தன்மையை வழங்குகின்றது. ஆனால் ஆன்மாவையும் இறைவனையும் உணராத நிலையில் மனிதன் தவறுகளை செய்ய எத்தனிக்கின்றான்...எப்பொழுது இறைவன் அவனுக்கு உணர்த்துகின்றாரோ அப்பொழுது அவனது ஆன்மா விழிப்படைந்து அவன் ஞானம் பெறுகின்றான். இறைவனை அடைகின்றான்.


உயிர் என்பது உடலின் இயக்கத்தன்மையை குறிப்பது. உடலில் எந்தவொரு இயக்கமும் நடைபெறவில்லை என்றால் அங்கே உயிர் என்பது இல்லை என அர்த்தம்.
உயிரும் ஆன்மாவும் ஒன்றல்ல, இரண்டும் வேறானவை.


- Yogi Shiva Nesananda

No comments:

Post a Comment

Yogi Shiva Nesanananda

Love yourself