ஓம் நமசிவாய!
ஓம் கிரியா பாபாஜி நம ஓம்!
துவைத வழிபாட்டு முறையில் பக்தன், குரு, கடவுள் ஆகியவை பிரதானமாக இருக்கிறது.
இதன் சாராம்சம் ஆக இருப்பது ஒருவன் "தன்னை கடவுள்" என்று நினைப்பதே பாவம். இந்தப் பாவ கருத்தை போதிக்கின்ற எந்த ஒரு சாஸ்திரங்களையும் சம்பிரதாயங்களையும் எரிக்கப்பட வேண்டும் எனப்படுகிறது.
ஒரு எளிமையான எடுத்துக்காட்டு மூலம் தெளிவாக புரிந்து கொள்ளலாம்.
இப்பொழுது நீங்கள் ஒரு அழகான சட்டை வேண்டும் என நினைக்கிறீர்கள். கலர், டிசைன் எல்லாம் முடிவு செய்து விட்டு டைலரிடம் துணியை குடுத்து அவர் வெட்டி, தைத்து உங்களிடம் கூலியும் பெற்று, முடிவில் உங்களுக்கு நீங்கள் விரும்பிய சட்டையை தந்து விடுவார். இது துவைதம்.
அந்த டைலர் தான் நீங்கள் விரும்பிய சட்டையை (கடவுளை) காட்டிய குரு. கூலி என்பது குரு தட்சணை.
துவைத வழிபாட்டு என்பது உருவ வழிபாட்டை குறிக்கிறது.
அத்துவைத வழிபாட்டு என்பது "அஹம் பிரம்மாஸ்மி" , "ஸோஹம்" என்ற முறைகளை அடிப்படையாகக் கொண்டது.
அஹம் பிரம்மாஸ்மி என்ற மகாவாக்கியம் எனில் `நான் பரம்பொருளாக இருக்கிறேன்` என்று பொருள்.
உண்மையில் நானாகிய நான், உள்ளத்திலிருந்து நோக்குகையில், இறையின் ஒரு துளியே நான் என வியக்கிறேன்.
எளிமையான உதாரணத்தின் மூலம் இதைப் பார்க்கலாம்.
நீங்கள் கடைக்கு சென்று, ரெடிமேடாக இருக்கும் பல சட்டைகளில், உங்களுக்கு பிடித்த ஒன்றை அணிந்து பார்த்து, சரியாக இருக்கிறதே என்ற நம்பிக்கையுடன், மகிழ்ச்சியாக பணமளித்துவிட்டு வந்தால் அதுவே அத்வைதம்.
எந்தவித பேதமும் பார்க்காமல் எல்லா சட்டையும் எனக்கு ஒன்று தான்! என்ற பூரண மனநிலையுடன் இருப்பவரே அத்வைதி.
துவைத வழிபாட்டு முறையில் பழக்கப்பட்டிருந்த சுவாமி விவேகானந்தர் அவர்களை அத்வைத வேதாந்தத்தில் புகுத்தியவர் குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர்.
அத்வைத தத்துவங்களிலும் குருவின் பெருமை சொல்லப்பட்டிருக்கிறது.
அடைய வேண்டிய நிலை, அதற்கு உதவும் குரு, முயற்சி செய்யும் சீடன் என்று மூன்று பேர் இருந்த போதும் இவர்கள் மூன்று பேருமே ஒருவர்தான் – உணர்தலில் தான் வேறுபாடு உள்ளது.
கோயிலில் நடைபெறும் விழாக்களில் ஆயிரக்கணக்கான மற்றும் லட்சக்கணக்கான மக்கள் இறைவனை தரிசிக்கலாம், இறைவனின் நாமத்தை ஜெபிக்கலாம், இறைவனின் பாடல்களையும் புராணங்களையும் கேட்கலாம். இதில் ஏறத்தாழ அனைவரது உணர்வு நிலையும் ஒன்றாகவே இருக்கிறது.
ஆனால் அதே விழாக் காலத்தில் ஒரு மகான் தனியாக அமர்ந்து தன் நிலை மறந்து சமாதி நிலையில் அனுபவித்த இறை உணர்வு நிலை மற்றும் காட்சிகளை மற்றவர்களுக்கு விளக்கவும் அல்லது பகிர்ந்து அளிக்கவும் முடியாது.
காட்சியும் சாட்சியும் உண்மை என்றால் த்வைதம்.
அக சாட்சிதான் எல்லாம், காட்சி சாட்சியின் ஒரு பரிணாமமே. அது ஒரு மாயமே என்றால் அத்வைதம்.
ஆன்மீகப் பயணம் மேற்கொள்பவர்கள் அவரவர்களுக்கு தகுந்த பாதை ஆகிய துவைத வழிபாட்டு முறையோ அல்லது அத்வைத வழிபாட்டு முறையோ தேர்ந்தெடுக்க வேண்டும்.
சிலருக்கு உருவ வழிபாட்டு முறை, சிலருக்கு குணங்களோடு கூடிய ஆனால் உருவமற்ற தெய்வ வழிபாட்டு முறை, வேறு சிலருக்கு சுத்த பக்தி நெறி மற்றும் சிலருக்கு யோக நெறி, சிலருக்கு ஞான நெறி என்று பல வகையான ஆன்மீக மார்க்கங்கள் உள்ளது.
- Yogi Shiva Nesananda
No comments:
Post a Comment