ஈரேழு பதினேழு உலகம்

ஓம் நமசிவாய!

ஓம் கிரியா பாபாஜி நம ஓம்!


இந்துமத வேத மரபின்படி இந்தப் பிரபஞ்சத்தில் பதினான்கு உலகங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது...ஈரேழு என்றால் இரண்டு ஏழு அதாவது பதினான்கு என்று அர்த்தம்..மேலுலகங்கள் ஏழு மற்றும் கீழுலகங்கள் ஏழு மொத்தம் பதினான்கு உலகங்கள் எனக் கணக்கு...நாம் வாழும் பூவுலகம் மேலுலகத்தில் உள்ளதாகும்...ஆகவே பூவுலகிற்கு மேல் ஆறு உலகங்களும், கீழே ஏழு உலகங்களும் இருக்கின்றன. அவைகள்;-

மேல் உலகங்கள் ஏழு:


 7. சத்யலோகம்- பிரமன்

இது பிரம்மாவின் உலகம். உண்மையின் உலகம் என்றும் சொல்லலாம். இந்த உலகம் நிரந்தரம். நாம் இந்த உலகிற்கு வந்தால் நமக்கு இனி பிறப்பு என்பது கிடையாது.


6. தபோலோகம்-  தேவதைகள்

இது தபம் செய்பவர்களுக்கும் தெய்வங்களுக்கும் இருக்கும் உலகம்.


5. ஜனோலோகம்- பித்ருக்கள்

பிரம்மாவின் மகன்கள் தங்குமிடம்.


 4. மஹர்லோகம்- முனிவர்கள்

மாபெரும் முனிவர்களும், மார்க்கண்டேயனை போல் முதிர்ச்சியடைந்த அவர்களும் மற்ற முனிவர்களும் வாழும் உலகம்.


 3. சுவர்லோகம்- சொர்க்கம், இந்திரன் மற்றும் தேவர்கள்

இந்திரன்,தேவதைகள் ரிஷிகள், கந்தர்வர்கள் மற்றும் அப்சரசுகள் வாழ்கிறார்கள்.

   

2. புவர்லோகம்- கிரகங்கள், நட்சத்திர தேவதைகள்

பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள இடைவெளி இந்த உலகம். தெய்வீக மனிதர்கள் வாழும் இடம். ஒரு உண்மையான பகுதி. வளிமண்டலம். வாழ்க்கை சக்தி.

 

1. பூலோகம் ( நாம் வாழும் உலகம்)

மனிதன் மற்றும் விலங்குகள் வாழும் இடம்.பூலோகம் என்பது பிரபஞ்சத்தின் ஆயிரம் மில்லியன் பங்கில் ஒரு பங்குதான் என்று விஷ்ணு புராணம் சொல்கிறது. இது ஒரு கர்ம பூமி. இங்கே ஜனிக்கும் உயிர்கள் பாவம் புண்ணியம் என்ற கர்மங்களை பெறுகின்றன. இறுதியில் தான் சேர்த்த பாவ புண்ணியங்களுக்கு ஏற்றவாறு மேல் லோகங்களை அல்லது கீழ் லோகங்களை அடைகிறான். லோகங்களை அடைந்தவர்கள் மீண்டும் பூமியில் பிறக்கிறார்கள். மேல் லோகத்தில், சில லோகங்களில் சென்றவர்கள் மட்டும் தர்மத்தை நிலைநாட்ட வேண்டி மீண்டும் பிறக்கிறார்கள். மகா புண்ணியம் செய்தவர்கள் பர பிரம்மத்தோடு இணைகிறார்கள் அவர்களுக்கு பிறப்பு இல்லை.


கீழ் உலகங்கள் ஏழு:

1. அதலலோகம்- காமுகர்கள்

காமுகர்கள் மற்றும் பெண்ணாசை பிடித்தவர்கள் இருக்கும் இடம். ஒரு ஆண் இந்த உலகத்தில் நுழையும் போது பெண்கள் அவனை வசியப்படுத்தி போதை மற்றும் பானங்கள் கொடுத்து அவனது பாலியல் ஆற்றலை அதிகப்படுத்துவார்கள்.பிறகு அவளுடன் காமக்களியாட்டம் நடத்துவார்கள். 

பிறப்பு இறப்பு அறியாத நிலை சென்று காமத்தில் மூழ்கித் திளைப்பார்கள்.


2. விதலலோகம்- அரக்கர்கள், பொன்னாசை

சிவனின் அம்சமான கடவுள் ஹர பவ என்பவனால் ஆட்சி செய்யும் உலகம். உடலில் இருந்து பிரிந்த ஆவிகளும், சிவகணங்களும், ஹர பவ கடவுளும், அவர் மனைவி பவானியும் இருக்கும் இடம்.

இங்குள்ள தங்க சுரங்கங்களுக்கு பேய்கள் தலைவனாக இருக்கும். இந்த உலகில் வாழ்பவர்கள் தங்கத்தால் அலங்கரிக்கப்பட்டு இருப்பார்கள்.


3. சுதலலோகம்- மகாபலி, மண்ணாசை

இது கடவுள் பக்தியுள்ள அரக்கன் மகாபலி அரசனாக இருக்கும் உலகம். விஷ்ணு மகாபலியை அடக்கி இந்த உலகிற்கு தள்ளினார். மகாபலி விஷ்ணுவை மன்றாடிக் கேட்ட பின் அவனை இந்திரனை விட பணக்காரனாக ஆக்கினார்.

மகாபலி இன்றும் இந்த உலகத்தில் விஷ்ணுவை வணங்கி கொண்டு இருக்கிறார்.


4. தலாதலலோகம்- மாயாவிகள்

சூனியத்தில் கைதேர்ந்தவன் ஆகிய பேய்களின் சிற்பி மாயாவியின் உலகம். சிவன் மாயாவின் மூன்று நகரங்களை அழித்து பின்பு அவனுடைய தவத்தில் மகிழ்ந்து அவனை அந்த உலகிற்கு அரசனாக்கினார்.


5. மகாதலலோகம்- அசுரர்கள்

நாகங்களும் அதன் தலைவனும் வாழும் உலகம்.


6. ரஸாதலலோகம்- அசுர ஆசான்கள்

கொடுமையான பேய்கள் ஆட்சி செய்யும் உலகம் இவர்கள் தேவர்களின் நிரந்தர எதிரிகள்.

பாம்புகள் போல துளைகளில் வாழ்பவர்கள்.


7. பாதாளலோகம்- வாசுகி முதலான பாம்புகள்

கீழே இருக்கும் பாதாள உலகம் இதை நாகலோகம் என்றும் அழைக்கலாம்.  வாசுகி என்ற நாகம் தான் தலைமை. நாகத்தின் தலையில் மாணிக்கக்கல் மற்றும் பல கற்கள் ஜொலிக்கும்.


- Yogi Shiva Nesananda


No comments:

Post a Comment

Yogi Shiva Nesanananda

Love yourself