உடல் என்றால் என்ன?
ஓம் நமசிவாய !
ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் !
உயிர் இந்த உடம்பை விட்டு விலகினால் ஆன்மாவும் நீங்கிவிடும்.
விடிந்தால் மீண்டும் இருள் வரும் என்பதை போல பிறந்தால் இறப்பு வரும் என்பதை அறியாது உலகம்.
உடலும் உயிரும் ஈசனின் ஜோதி ரூபத்தில் தொலைந்து போனால் துன்பத்தில் வீழ்ந்து 7 பிறப்பையும் பிறந்து இறந்து இறுதியில் நரகத்தில் தான் விழுந்து கிடப்பர்.
உயிர் போன உடம்பை காக்கா தின்றால் என்ன அல்லது புகழ்ந்து பேசினால் என்ன இந்த உடம்புக்கு வருவது எதுவுமே இல்லை.
இந்த உடலை விட்டு ஈசன் புறப்பட்டுப் போய் விட்டால் பிணமாகிப் போய் இக்கூடும் அழிந்தே போகும்.
சிவத்தை நினைந்து வாழ்வோம். சிவனடி சேர்வோம்.
உடம்போடு சேர்ந்தேன் என்ற உயிர் பாதியிலேயே உடம்பை விட்டு ஓடும் போது அடையும் துன்பத்தை மரண வலி என்பார்கள். ஈசனையே நினைத்திருக்கும் அடியார்களுக்கு ஈசன் துன்பத்தை விலக்கி அந்த நேரத்தில் அருள் செய்வான்.
மெய்ப் பொருளை அறிந்து சிவ சிந்தனையிலேயே நின்று தியானம் செய்வோருக்கு எமன், அவன் தூதர்களால் துன்பம் தர இயலாது. அவர்கள் உயிர் பிரியும் காலத்திலும் ஈசனே வந்து தன்னோடு சேர்த்துக் கொள்வான்.
இந்த உடல் நீங்கள் சிறிது சிறிதாக சேகரித்ததுதான். இந்த உடலை நீங்கள் பூமித்தாயிடமிருந்து கடனாகப் பெற்றிருக்கிறீர்கள். ஆனால் நேரம் வரும்போது ஒரு அணுவைக்கூட விடாமல் திரும்பப் பெறுவாள். ஆனால் மக்கள் அந்தக் கடனை எப்போதுமே திருப்பிக் கொடுக்க விரும்புவதில்லை.
எனவே, இந்த பூமிக்கிரகத்தில் இருந்து பெற்ற கடனைத் திருப்பிக் கொடுக்கும் நேரம் வரும்போது மிகவும் நடு நடுங்கிப் போகிறார்கள். வாங்கிய கடனைத்தான் நீங்கள் திருப்பிக் கொடுக்கிறீர்கள். ஆனால் ஏன் இந்த போராட்டம் ஏற்படுகிறதென்றால், நீங்கள் ஒரு கடனை (உடல்) பெற்றீர்கள், சில நாட்களுக்குப் பின்னர், "அந்தக் கடன் (உடல்) தான் நான்" என்று நினைத்துக் கொண்டீர்கள். இது உண்மையாகவே முற்றிலும் ஒரு அபத்தமான சூழ்நிலை.
நீங்கள் என்பது எடுத்துச் செல்லப்படவில்லை. எடுத்துச் செல்லப்படுவது நீங்கள் சேகரித்த உணவு மட்டுமே. இந்த உடலாக நீங்கள் சேகரித்த இந்த கிரகத்தின் ஒரு பகுதி மட்டுமே. அதை இந்த கிரகம் திரும்பக் கேட்கிறது. "இந்த உடல் நான் சேகரித்தது மட்டுமே" என்று, காரண அறிவில் மட்டுமில்லாமல், ஒவ்வொரு கணமும் விழிப்புணர்வோடு நீங்கள் இருந்தால், "இந்த உடலை நான் சேகரித்தேன், உபயோகிப்பேன், தேவைப்படும்போது விட்டு விடுவேன்", என விழிப்புணர்வோடு வாழ்க்கை முழுவதும் இருந்தால், இறப்பு என்பது ஆடை மாற்றிக்கொள்வது போல்தான்.
நீங்கள் இறக்கும்போது எப்படியும் இந்த பூமிக்கு உங்கள் கடனைத் திருப்பி செலுத்தி விடுவீர்கள். ஆனால் இதை விருப்பத்துடன் செய்தீர்களா இல்லை விருப்பமின்றி செய்தீர்களா என்பதுதான் கேள்வி. கொடுத்த கடன் நிச்சயமாக திரும்ப எடுத்துக் கொள்ளப்படுகிறது. ஆனால் நீங்கள் ஒரு யோகியாக இருந்தால், இந்த உடல் திரும்பப் பெறப்படும்போது, ஆனந்தமாக கடனைத் திருப்பிக் கொடுப்பீர்கள்.
- Yogi Shiva Nesananda
No comments:
Post a Comment