ஓம் கிரியா பாபாஜி நம ஓம் !
இந்த மந்திரத்தை 108 தடவை தினமும், கைகளின் விரல்களை
அபான வாயு முத்திரையில் வைத்து உச்சாடனம் செய்யவும்.
இதன் அர்த்தம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
ஓம் (OM) என்பது மூன்று எழுத்துக்களைக் AUM கொண்டது
இது கடவுளின் மூன்று அம்சங்களைக் குறிக்கிறது:
பிரம்மா (A), விஷ்ணு (U) மற்றும் சிவன் (M).
உங்களுக்குள் இருக்கும் பிரபஞ்சத்தின் சத்தமே ஓம்.
க்ரியா ( செயல், ஞானம், முயற்சி) என்பது பொதுவாக
ஒரு "முழுமையான செயல்,
"நுட்பம்". மகா அவதார் பாபாஜி வழங்கிய யோகா ஒழுக்கத்தில் உள்ள
பயிற்சியைக் குறிக்கிறது.
மகா அவதார் பாபாஜிகிரியா யோகத்தின் ஊற்று, அதன் சத்குரு, மனித எல்லையைக் கடந்த
ஓர் மாபெறும் சித்தர், நமது தந்தையான இறைவனை அடைவதற்கான
வழியை அளிப்பவர்.
நம ஓம் என்பது மகா அவதார் பாபாஜியயை வணங்க ஒரு அழைப்பு.
ஓம் க்ரியா பாபாஜி நம ஓம்!
(ஓம் - பிரணவ மந்திரம் , க்ரியா - செய்வது,
பாபாஜி - நித்திய ஆன்மீக ஆசிரியர், நம - வணக்கம்,
ஓம் - பிரணவ மந்திரம்)
ஏகம் யேவா த்விதீயம்
ஏகம் யேவா த்விதீயம்
(இரண்டு இல்லாமல் ஒன்று உண்டு (பிரம்மன்)
ஏகோ தேவஹ சர்வ பூதாந்த ராத்மா
(அனைத்து இதயங்களிலும் ஒரு உணர்வு)
ஏகா பாஷா பூதகாருண்யா ரூபா
(தெய்வீக கருணையின் வடிவமாக ஒளிரும் ஒன்று)
ஏகம் லக்ஷ்யம் ஸமராஸ்யம் ஸமேஷம்
(அனைவருக்குள்ளும் சமத்துவத்தை அடைவதே ஒரு நோக்கம்)
ஏகம் ஸர்வம் சித்தம் ஆநந்த பூர்ணம்
(அனைத்தும் ஒன்று மற்றும் முழுமையான மற்றும் நித்திய பேரின்பம்)
ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் !
- Yogi Shva Nesananda
No comments:
Post a Comment