கிரியா யோகாவின் 8 நிலைகள்

1 இயமம்

மனம் சம்பந்தப்பட்ட ஒழுக்க நியதிகள். முக்கியமான கட்டுப்பாடுகள்

அஹிம்சை, சத்தியம், பிரம்மச்சரியம், அஸ்தேயம், பேராசையின்மை

போன்ற அடிப்படை மனித பண்புகளை வளர்க்க வேண்டும்.

எந்த உயிரையும் கொல்லாதவன், புலன் அடக்கம் உள்ளவன், நல்ல தீர்ப்பு செய்ய வல்லவன், பொய் சொல்லாதவன், திருடாதவன் ,நற்குணம் உடையவன் ,கிடைத்த உணவை பகுத்து உண்பவன், குற்றமில்லாதவன், கள் குடியாதவன் , காம இச்சை இல்லாதவன், ஆகிய தகுதிகளை உடையவனே இயமத்தை கைவர பெற்றவன் ஆவான்.

2. நியமம்

இதுவும் மனம் சார்ந்த ஒழுக்க கோட்பாடுகள் – அகத்தூய்மை,

புறத்தூய்மை, தவம், புனித நூல்கள் படித்தல்,

இறைவனிடம் சரணாகதி முதலியவற்றை விளக்குகிறது.

பொறிபுலன்களை அடக்கி, இறை சிந்தனையோடு இருப்பது தவம்.

இறைவனுடைய திருநாமங்களை உருச்செய்து , செபம் செய்து எப்பொழுதும் ஆனந்தமாய் இருப்பது, சந்தோடம் வேள்வி செய்தல் நுணுக்கமான ஒளி பொருந்திய ஆன்மீக அறிவோடு இருத்தல் வேண்டும் அதுவே நியமமாகும்.

3. ஆசனம் 

ஆசனம் என்றால் என்ன? ஒவ்வொரு நோயையும், யோகாசனம்

எப்படி குணப்படுத்துகின்றது? ஆசன விதிமுறைகள் என்ன?

மாணவர்களுக்கு ஆசனம் எப்படி உதவுகின்றது? பெரியவர்களுக்கு,

பெண்களுக்கு எப்படி உதவுகின்றது? என்பது விளக்கப்படுகின்றது.

நீரிழிவு, இரத்த அழுத்தம், கழுத்து வலி, மூட்டு வலி, முதுகு வலிக்கு

முற்றுப்புள்ளி ஆசனத்தில் உள்ளது.


பத்மாசனம் முதலாகப் பரந்துப்பட்ட ஆசனங்கள் பல உண்டு.

சமதளத் தரையில் மேட் அல்லது போர்வையைப் போட்டுக் கொள்ளலாம். போர்வையில் அமர்ந்து கொண்டு வலது பாதத்தை இடது தொடையின் மேலும் இடதுபாதத்தை வலது தொடையின் மேலும் பொருந்தும்படியாக அமைத்துக் கொள்ளவேண்டும்.

இரண்டு கால்களும் அடிவயிற்றை ஒட்டினாற்போல் இருக்க வேண்டும். அடிப்பாதங்கள் மேல் நோக்கி இருக்க வேண்டும். உங்களுடைய முழங்கால்கள் தரையில் படும்படி நேராக நிமிர்ந்து உட்கார வேண்டும்.

அமரும்போது வடக்கு அல்லது கிழக்கு நோக்கி அமர்வது நல்லது. பத்மாசனத்தில் அமர்ந்து கையின் கட்டைவிரலின் நுனி ஆள்காட்டி விரலின் நுனியைத் தொடுமாறு இருக்க வேண்டும். நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்திக் கட்டுப்படுத்தவே இந்த சின்முத்திரை. இப்படி அமர்ந்த பிறகு கண்களை மூடி இஷ்டதெய்வத்தை நோக்கி பிரார்த்தனை செய்யலாம்.

4.பிராணாயாமம்

பிராணன் என்றால் என்ன? இது மனிதனின் ஆயுளை எப்படி அதிகரிக்கும்?

மனம் ஒருமைப்பட எப்படி பிராணாயாமம் உதவுகிறது?

இதயம் நுரையீரலை எப்படி பாதுகாக்கிறது? என்ற விளக்கம் உள்ளது.

பறவையைக் காட்டிலும் விரைந்து செல்லக்கூடிய பிராணாயாமக் குதிரையை பயிற்சி மேற்கொள்வோமேயானால் கள் தரக்கூடிய போதையையும் மகிழ்ச்சியையும் அது கொடுக்கும். துள்ளி நடக்குமாறு செய்யும், சோம்பலை நீக்கும். இதை உணர்வுடையவர்களுக்கு மட்டும் தான் சொல்லித்தர வேண்டும் .

பத்மாசனத்தில் அமர்ந்து சுலபமாக செய்யலாம். முதலில் வலது நாசித் துவாரம் வழியாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும் (4 counts) . சிறிது நேரம் மூச்சை உள்ளே அடக்கிய பிறகு (8 counts) இடது மூக்குத் துவாரம் வழியாக காற்றை (16 counts) வெளியிட வேண்டும்.பிறகு இடது நாசித் துவாரம் வழியாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும் (4 counts) . சிறிது நேரம் மூச்சை உள்ளே அடக்கிய பிறகு (8 counts) வலது மூக்குத் துவாரம் வழியாக காற்றை (16 counts) வெளியிட வேண்டும்

இந்த பயிற்சியை தினமும் ஐந்து முறை செய்து வரலாம்.

5. பிரத்தியாகாரம்

இது முழுக்க முழுக்க மனதை உள்முகமாக திருப்பும் பயிற்சி.

நமது ஆன்ம ஆற்றலை உணர வைக்கும் பயிற்சி.

மூச்சை வசப்படுத்தினால் மனம் வசப்படும் வெளியே விடும் மூச்சை சிறிது நேரம் உள்ளே நிறுத்தி, திறமையுடன் மனத்தை மூச்சுடன் பொருந்தி நிற்கச் செய்தால், மனத்தின் எண்ண ஓட்டம் நின்று மனம் வசப்படும். நம்முள்ளே குடியிருக்கும் நம் சிவபெருமான் நம்மை விட்டு நீங்க மாட்டான். திறமையுடன் கும்பகம் செய்தால் மனம் நம் வசப்படும்.

தியானம் செய்யும் பொழுது நம்முள் உருவாகும் மாய எண்ணங்களை விடுவித்து மனதை ஒரு நிலைப்படுத்துதல்.

6.தாரணை

மனதை ஒரு பொருளில் குவிய செய்தல்.

அதன் மூலம் எண்ணற்ற ஆற்றலை அடையலாம். தாரணை கை கூட

வைராக்கியம், சாத்வீக உணவு, தனித்திருத்தல் முதலியவை தேவை.

பசி, பிணி, மூப்புகளால் அரிக்கப்பட்ட இந்தவுடம்பை ஐம்பூதங்கலான மண். காற்று, நீர், நெருப்பு, நிலம், ஒடுக்கி, ஐம்பூதங்களை சுவை,ஒளி, ஊரு ஓசை, நாற்றம் என்னும் ஐந்தில் ஒடுக்கி அவற்றை மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் கரணங்களில் ஒடுக்கினால் தாரணை நிலை பெற்றதாகும்.

பிரத்யாகாரம்  உள்நிலை பயணம்தான். தாரணை உள்நிலை பயணம்தான். ஆனால் தாரணையில் மிகவும் உள் சென்று பார்க்க வேண்டும்.

தாரணை = மனதை ஒன்றின் மீது நிலைநிறுத்துதல்.

7. தியானம் 

பஞ்ச பூதம் 5 (நிலம், நீர்,நெருப்பு,காற்று,ஆகாயம்),

அந்தக் கரணங்கள் 4 (மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்),

பஞ்ச ஞானேந்திரியங்கள்5 (மெய்,வாய்,கண்,மூக்கு,செவி) .

ஆகியவற்றை தியானமுறைப்படி அந்தந்த ஆதாரங்களில்

வைத்து தியானித்தல் தியானமாகும், அதற்கு மேலாக ஒளி வடிவாய் இருக்கும்

சக்தியையும் அருள் வடிவாய் இருக்கும் சிவத்தையும் தியானித்தல்.

தாரனையின் முடிவு தியானமாகும். மன அமைதி. இதயம் பாதுகாக்கப்படும். எந்த நோயும் வராது. தியானம் கைகூடினால் எல்லாம் கைகூடும்.

8 சமாதி

சமாதி என்னும் முடிவு நிலையானது இயமம், நியமம், முதலிய ஏழு படிகளிலும்

தவறாமல் நிற்பவர்க்கே கிட்டும் அட்டமாசித்திகளும் அமையும், சமாதி நிலை

பெற்றவர்க்கே யோகமானது முற்றுப் பெறும்.

ஆதியில் சமம். எண்ணமற்ற நிலை. மனம் கரைந்த நிலை. மௌன நிலை. பேரின்ப நிலை. இதுவே நம் உண்மை இயல்பு.


- Yogi Shiva Nesananda

No comments:

Post a Comment

Yogi Shiva Nesanananda

Love yourself