ஓம் நமசிவாய!
ஓம் கிரியா பாபாஜி நம ஓம்!
அட்டமா சித்திகள் எவை?
அட்டமா சித்தி என்று மரபாகக் கருதப்படும் எட்டுத்
திறமைகளை அடைந்தவர்கள்
சித்தர்கள் ஆவர். இவை இயற்கை அளித்த திறமைகள் எனவும்
அற்புதத் தன்மை உடையன என்றும் கருதப்படுகின்றன.
இவ்வாறான அட்டமா சித்திகளைச்
சித்தர்கள் அட்டாங்க யோகப் பயிற்சியினால் பெற்றனர்.
இந்தச் சித்திகளைத் திருமந்திரம் விளக்குகிறது.
அனி மாதி சித்திகளானவை கூறில்
அணுவில் அணுவின் பெருமையின் நேர்மை
இணுகாத வேகார் பரகாய மேவல்
அணுவத் தனையெங்குந் தானாத லென்றெட்டே
திருமூலர்--திருமந்திரம்-668வது பாடல்
அட்டமா சித்திகள் விளக்கம்
1. அணிமா - அணுவைப் போல் சிறிதான தேகத்தை அடைதல்.
2. மகிமா - மலையைப் போல் பெரிதாதல்.
3. இலகிமா - காற்றைப் போல் இலேசாய் இருத்தல்.
4. கரிமா - கனமாவது-மலைகளாலும், வாயுவினாலும்
அசைக்கவும் முடியாமல் பாரமாயிருத்தல்.
5. பிராப்தி - எல்லாப் பொருட்களையும் தன்வயப் படுத்துதல், மனத்தினால்
நினைத்தவை யாவையும் அடைதல், அவற்றைப் பெறுதல்.
6. பிராகாமியம் - தன் உடலை விட்டு பிற உடலில் உட்புகுதல்.
(கூடு விட்டுக் கூடு பாய்தல்)
7. ஈசத்துவம் - நான்முகன் முதலான தேவர்களிடத்தும்
தன் ஆணையைச் செலுத்தல்.
ஐந்து தொழில்களை நடத்துதல்.
8. வசித்துவம் - அனைத்தையும் வசப்படுத்தல்.
ஏழுவகைத் தோற்றமாகிய தேவ,
மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம்
முதலியவற்றைத் தம்வசப்படுத்துதல்.
- Yogi Shiva Nesananda
No comments:
Post a Comment