பெண்கள் எப்படி பக்தி செலுத்த வேண்டும்?

 பெண்கள் எப்படி பக்தி செலுத்த வேண்டும்?


ஓம் நமசிவாய!

ஓம் கிரியா பாபாஜி நம ஓம்!


இந்த உலகத்தில் பக்தியில் சிறந்தவர்கள் ஆண்கள் என்ற ஒரு கருத்து நிலவுகிறது.

ஆண்கள் பக்தியில் எவ்வாறு ஈடுபட வேண்டும் என்று பல இலக்கியங்கள் இருக்கின்றன.


சைவ மதத்தில் உள்ள 18 சித்தர்களும் ஆண்கள்.


சைவ மடாதிபதிகள் அனைவரும் ஆண்கள்.


63 நாயன்மார்களில் மூன்று நாயன்மார்கள் மட்டுமே பெண்கள். அவர்களின் நாமங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

உள்ளன.

  1. இசைஞானியார் நாயனார்

  2. காரைக்கால் அம்மையார்

  3. மங்கையர்க்கரசியார் நாயனார்


12 ஆழ்வார்களில் கண்ணனைச் சரணடைந்த ஸ்ரீ ஆண்டாள் மட்டுமே பெண் ஆவார்.


தமிழ்ச் சமுதாயம் நல்லொழுக்கத்திற்கு முக்கியத்துவம் அளித்ததிற்கு ஔவையின் ஆத்திசூடி பெரிய பங்கு வகிக்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது.


முப்பெரும் தேவியர் என்பது இந்து சமயத்தில் மூன்று பெண் கடவுள்களைக் குறிப்பதாகும். இது திருமூர்த்திகளுக்கு இணையான பெண் வடிவம் ஆகும். இந்து மாதத்தில் முப்பெரும் தேவியர் லட்சுமி, பார்வதி, சரசுவதி ஆவர். பெண்களை கடவுளாகப் போற்றும் சமூகம் நம்முடையது.


இந்தப் பதிவின் முக்கிய பகுதியாகிய பெண்கள் எவ்வாறு பக்தி செலுத்துவது என்பதை பார்க்கலாம்.


இந்து மதம் பக்தி உணர்வில் ஆண், பெண் என ஒருபோதும் பிரித்துப்பார்க்கவில்லை. 


இறைவனது திருப்பணியில் அதிகம் ஈடுபாடு செலுத்துவது பெண்கள் தான். வீட்டை தூய்மைப்படுத்தி பூஜை செய்து இறைவனை இல்லத்தில் நிறுத்தி வைப்பதிலும், ஆலயங்களில் நடைபெறும் பூஜைகளிலும் பெண்களின் பங்கு இன்றியமையாதது.


தாய்மை என்னும் அற்புதமான வரம் பெற்றவள் பெண். அதனால் தான் பெண்களை தெய்வத்துக்கு சமமானவர்கள் என்று ஒப்பிட்டு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது.


இறைவனை காதலன் காதலனாக பாவித்தல்:

காதலும் ஒரு வகை பக்தி என்று கொள்ளப்படுகிறது அவ்வகையில் ஆண்டாள் சிறுவயதில் இருந்து இறைவனையே காதலித்து மணம் புரிய விரும்பினார்கள்.


ஆண்டாளுடைய காதல் பக்தியை அந்தக் கடவுளும் ஏற்றுக்கொண்டு ஸ்ரீரங்கத்து பெருமாளுடன் ஆண்டாள் இரண்டறக் கலந்தார்.


மீராபாய் அவர்களும் கடவுளின் மீது காதலாகி கசிந்துருகி அவர் வாழ்க்கையின் கடைசியில் துவாரகையில் உள்ள கிருஷ்ணருடன் இரண்டறக் கலந்தார்.


இறைவனை தந்தையாக பாவித்தல்:

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் அவர்களின் பக்தி பாவம் என்பது தன்னை பிள்ளையாகவும் இறைவனை தந்தையாகவும் பாவித்து பக்தி செலுத்திய வகை.


இறைவனை நண்பனாக பாவித்தல்:

சுந்தரமூர்த்தி நாயனார் அவர்களின் பக்தி பாவம் என்பது தன்னை ஆண்டவனின் நண்பனாக பாவித்து பக்தி செலுத்திய வகை.


இறைவனின் அடிமையாக தன்னை பாவித்தல்:

திருநாவுக்கரசர் நாயனார் அவர்களின் பக்தி பாவம் என்பது தன்னை ஆண்டவனின் அடிமையாகவும் இறைவனை முதலாளியாகவும் பாவித்து பக்தி செலுத்திய வகை.


இறைவனே குருவாக பாவித்தல்:

மாணிக்கவாசகர் அவர்கள் இறைவனிடத்தில் குரு சிஷ்ய பாவனையில் இறைவனை குருவாக பாவித்துக் கொண்டு தன்னை சீடராக பாவித்து பக்தி செலுத்தினார்.


மேலே கூறப்பட்டுள்ள வழிமுறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து, இறைவனின் மீது பக்தி செலுத்துங்கள். உங்களது வாழ்க்கையில் இறைவனது மந்திரத்தை ஜெபித்தல், சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள விரதங்கள் மேற்கொள்ளுதல், இறைவனது திருநாமங்களைப் பாடுதல், இறைவனுக்கு மாலை தொடுத்து சாத்துதல் என்று இறைவன் கொடுத்த வாழ்க்கையை இறைவனுக்காக அர்ப்பணியுங்கள்.


ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி "நான்" என்ற ஆணவத்தை விட்டு இறைவனிடம் சரணாகதி அடைந்து தன்னில் இறைவனை உணர்வதே சிறந்த பக்திமார்க்கம்.


எனது வாழ்வில் பெண்கள் இரண்டறக் கலந்து உள்ளார்கள் அவர்களிடம் நான் பார்த்த பக்தியை இந்தப் பதிவில் குறிப்பிட விரும்புகிறேன்.


காளியம்மன் கோவிலில் தீ மிதிக்கும் விழாவின்போது பெண்கள் மஞ்சள் உடை தரித்து தீ மிதித்து அவர்கள் பக்தியை அம்மனிடம் காட்டுவதை நான் பார்த்திருக்கிறேன்.


புரட்டாசி மாதத்தில் குடும்பத்தினரை அசைவ உணவு சாப்பிடாமல் பார்த்துக் கொள்வதிலும் மற்றும் சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து பெருமாளுக்கு பிரசாதம் படைப்பதிலும் பெண்களின் பக்தியை நான் பார்த்துள்ளேன்.


மாரியம்மன் திருவிழாவில் மாவிளக்கு ஏந்தி செல்வதிலும் மற்றும் தினமும் காலை கோவிலுக்கு வேப்ப இலை மற்றும் தண்ணீர் கொண்டு செல்வதையும் நான் பார்த்திருக்கிறேன்.


பெண்கள் பல மைல்கள் நடந்து சென்று பழனியில் உள்ள முருகரை தரிசனம் செய்வதே நான் பார்த்திருக்கிறேன்.


திருவண்ணாமலை கிரிவலத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் கிரிவலம் செல்வதை பார்ப்பதற்கு கண் கொள்ளாக் காட்சியாக இருக்கும்.


சிவாலயங்களில் காலை 8 மணிக்கு ஆரம்பித்து மாலை 3 மணிக்கு முடியும் திருவாசகம் முற்றோதலில், பெண்கள் பக்தியில் சிவனுடன் இரண்டறக் கலந்ததை பலமுறை நான் தரிசித்து இருக்கிறேன்.


இந்தத் தருணங்களில் என்னால் பெண்களை தெய்வமாக மட்டுமே பார்க்க முடிந்தது.


Yogi Shiva Nesananda

No comments:

Post a Comment

Yogi Shiva Nesanananda

Love yourself